அதானி ஆர்பரில் இருந்த ஹெராயின்கள் தாலிபன்களுக்கு சப்ளை செய்ய இருந்ததா? பரபரப்பை கிளப்பும் தகவல்கள் இதோ!

 


குஜராத் துறைமுகத்தில் கப்பல் வழியாக போதை பொருள் கடத்தபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். கடந்த செப்டம்பர் 17ம் தேதி சோதனையில் 2 பெட்டகங்களில் முகப்பவுடர் என்ற பெயரில் 3000 கிலோ அளவில் பொருட்கள் இருந்தது.

சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வு துறையினர் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்திய போது விலையுயர்ந்த போதை பொருளான ஹெராய்ன் என கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 21ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த போதை பொருளை அனுப்பிய நபர்கள் யார் என விசாரணை நடத்திய போது விஜயவாடாவில் இயங்கி வரும் நிறுவனத்தின் பெயரில் ஆப்கானிஸ்தானிலிருந்து குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்தது தெரியவந்தது.

மேலும் போதை பொருளை டெல்லிக்கு கடத்த முற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஜி.எஸ்.டி பெயரை வைத்து விசாரித்த போது சென்னையை சேர்ந்த தம்பதியான மச்சாவரம் சுதாகர் மற்றும் வைசாலி ஆகியோர் நிறுவனத்தை நடத்தி வந்தது தெரியவந்தது.

அதானி ஆர்பரில் இருந்த ஹெராயின்கள் தாலிபன்களுக்கு சப்ளை செய்ய இருந்ததா? பரபரப்பை கிளப்பும் தகவல்கள் இதோ!

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் கொலப்பாக்கத்தில் வைசாலியின் தந்தையான கோவிந்தராஜூ வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர். இதனையடுத்து குஜராத் முந்த்ரா நீதிமன்றத்தில் தம்பதியை ஆஜர்படுத்தி 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து வருவாய் புலனாய்வு துறையினர் சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து போதை பொருட்கள் கடத்தி வருவதால் தாலிபனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் 3000 கிலோ ஹெராய்ன் பறிமுதல் செய்த விவகாரத்தில் தமிழக காவல்துறையும் விசாரணையை துவக்கியுள்ளது. குறிப்பாக போதைப்பொருள் புலனாய்வு பிரிவு போலிசார் செங்கல்பட்டு மாவட்டம் கொலப்பாக்கத்தில் தம்பதிகள் தங்கி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என விசாரணையயை துவக்கி உள்ளனர்.

குறிப்பாக இந்த தம்பதி இயக்கி வந்த ஆஷி டிரேடர்ஸ் நிறுவனம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலில் எவரும் ஈடுபட்டுள்ளார்களா என்கிற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் சென்னையில் கைது செய்யப்பட்டவர்களின் தகவல்களையும், அவர்கள் தொடர்பான ஆவணங்களையும் பெறவும் தமிழக போலிசார் திட்டமிட்டுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்