`சச்சின் டெண்டுல்கர் போல சாதனையாளர்’ தலைமை நீதிபதியை புகழ்ந்த நீதிபதி!

 


சமீபத்தில் உச்ச  நீதிமன்றத்திற்கான 9 நீதிபதிகள் நியமனத்தின் மூலம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நுதலபதி வெங்கட ரமணா சச்சின் டெண்டுல்கரைப் போல சாதனைகளுக்கு மேல் சாதனை செய்துள்ளதாகப் புகழாரம் செய்துள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய். இந்திய பார் கவுன்சில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு அளித்த நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு பேசியுள்ளார் நீதிபதி கவாய். 

மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமைப் பண்புள்ளவர் எனவும், இந்திய நீதித்துறையின் உண்மையான தலைவர் எனவும் வர்ணித்துள்ளார். ”அவரது தலைமையால் எளிய மனிதனும் நீதிமன்றத்தில் உண்மையான நீதிபதி இருக்கிறார் என நம்பிக்கை கொள்கிறான். அவருக்கு எளிய மனிதர்கள் மீதும், சமூகத்தில் கீழ்மைப்படுத்தப்பட்டவர்கள் மீதும் கரிசனம் இருக்கிறது” என்றும் கூறியுள்ளார் நீதிபதி பி.ஆர்.கவாய். 

`சச்சின் டெண்டுல்கர் போல சாதனையாளர்’ தலைமை நீதிபதியை புகழ்ந்த நீதிபதி!
நீதிபதி பி.ஆர்.கவாய்

”தலைமை நீதிபதி ரமணா மற்ற நீதிபதிகளைத் தனது சகோதரர்களைப் போல நடத்துகிறார். அவர் ஓர் மிகச் சிறந்த மனிதர்” என்றும் நீதிபதி பி.ஆர்.கவாய் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதியான வினீத் சரண் நீதிபதி ரமணா தங்கமான மனம் கொண்டவர் எனக் கூறியுள்ளார். "ஒரே நியமனத்தில் ஒன்பது நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு வரவழைத்திருப்பது, வெவ்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதி நியமனங்கள் எனத் தொடர் சாதனைகளில் ஈடுபட்டு வருகிறார் தலைமை நீதிபதி என்.வி. ரமணா. 10 வயது சிறுமியின் கடிதத்தைப் பொதுநல வழக்காக மாற்றியதில் இருந்து, நீதிபதி என்.வி.ரமணாவின் நல்ல குணம் நமக்கு வெளிச்சமாகிறது” என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் நீதிபதி வினீத் சரண். 

சமீபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதால், நீதிமன்றங்களும் திறக்கப்பட வேண்டும் எனக் கோரி கடிதம் எழுதினார். நீதிபதி ரமணா இந்தக் கடிதத்தைப் பொதுநல வழக்காக மாற்றி உத்தரவிட்டார். 

`சச்சின் டெண்டுல்கர் போல சாதனையாளர்’ தலைமை நீதிபதியை புகழ்ந்த நீதிபதி!
தலைமை நீதிபதி என்.வி.ரமணா

மற்ற நீதிபதிகளின் புகழாரங்களைக் கேட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா இந்த நிகழ்ச்சியில் பேசினார். அவர், “75 ஆண்டுக் கால சுதந்திரத்திற்குப் பிறகு, தற்போதைய சூழலில் அனைத்து துறைகளிலும் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், இந்திய நீதித்துறையின் உயர் பொறுப்புகளில் 11 சதவிகிதப் பெண்கள் வருவதற்கே இவ்வளவு காலம் பாடுபட வேண்டியதாக உள்ளது. எனவே நீதித்துறையில் அதிகளவில் பெண்களை வரவேற்க வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று இந்திய நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசினார். மேலும் அவர் நீதித்துறையின் கட்டமைப்புக் குறைபாடு, நீதிமன்ற நிர்வாக அலுவலர்களின் எண்ணிக்கையில் குறைவு, நீதிபதிகளின் எண்ணிக்கையில் போதாமை, நீதித்துறை சந்திக்கும் சவால்கள் முதலான பல்வேறு விவகாரங்களைக் குறிப்பிட்டு, படிப்படியாக ஒவ்வொன்றும் சரிசெய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.  

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)