பாதாள சாக்கடை பணியின் போது பள்ளத்தில் கவிழ்ந்த ஜேசிபி : ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்!!!

 


கன்னியாகுமரி : நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாதாள சாக்கடைக்காக குழி தோண்டும் பணியில் ஈடுப்பட்டிருந்த ஜேசிபி எந்திரம் திடீரென கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் கன்னியாகுமரி- பார்வதிபுரம் சாலையில் குழி தோண்டும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே குழி தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஜேசிபி எந்திரம் திடீரென கவிழ்ந்து 10 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் ஓட்டுநர் அதிஷ்டவசாமாக உயிர்தப்பினார்.

ஜேசிபி எந்திரத்தை மீட்க கிரைன் வசதி ஏற்பாடு செய்யாததால் வேறு ஒரு ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளத்திலிருந்து ஜேசிபி எந்திரத்தை மீட்கும் பணி தாமதம் ஏற்பட்டது. மேலும் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.