லட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம்: பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகாரளிக்கலாம்..!!
கோவை: தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்த நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை 100 அடி ரோடு எம்.எம் காம்ப்ளக்சில் இயங்கிவந்த தனியார் நிதி நிறுவனம் மற்றும் ரேஸ்கோர்ஸ் ராஜ நாராயண டவர் முதல் தளத்தில் இயங்கி வந்த மற்றொரு தனியார் நிதி நிறுவனத்திலும் அதன் இயக்குனர்கள் பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்று அதிக வட்டி தருவதாக கூறி நூற்றுக்கணக்கானவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே மேற்கண்ட நிதி நிறுவனத்தில் பாதிக்கபட்டவர்கள் தகுந்த ஆவணங்களுடன் அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.