இனி தாலிக்கு தங்கம் திருமண உதவித் தொகை எல்லோருக்கும் கிடையாது.. அரசு வெளியிட்ட புதிய விதிமுறைகள்..!!

 


தாலிக்கு தங்கம் திருமண உதவித் தொகை திட்டம் கிடைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில், முக்கிய திட்டமாக இருப்பது தாலிக்கு தங்கம் திருமண உதவித் தொகை திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

திருமணத்திற்கு 15 நாளுக்கு முன்னர் மணப்பெண்ணின் பெற்றோர், இருப்பிடச்சான்று, வருமானச் சான்று, திருமண பத்திரிக்கை உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். திருமணம் முடிந்ததும், அதனை பதிவு செய்து பதிவு சான்றிதழுடன் விண்ணப்பித்தால் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும்.

இந்த நிலையில், தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவி பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலும், அல்லது வேறு ஏதேனும் திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளாரா என்பதையும் ஆய்வு செய்து அப்படி இருப்பின் அந்த விண்ணப்பத்தினை தள்ளுபடி செய்திட வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் நபர் மாடி வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் மனு தள்ளுபடி செய்திட வேண்டும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருப்பதற்ளகான வருமான சான்றிதழை அரசு அலுவகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சி திருமண மண்டபங்களில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்யும் வகையிலும் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசின் புதிய அறிவிப்பினால் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு திட்டத்தின் பலன்கள் விரைவில் கிடைக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)