விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திறண்ட பொதுமக்களால் திணறியது வாலாஜா

 


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாலாஜா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் நேற்று 10.09.21 காலைமுதற்கொண்டே வாலாஜா பஜார் வீதியில்  திரண்டனர்

  விநாயகர் சிலை,மற்றும் படையளுக்குரிய பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றர் பல வர்ணங்கள் தீட்டபட்ட அழகிய  விநாயகர் சிலைகள் 50 ரூபாய் முதல் 5000 வரை விற்பனை செய்யப்பட்டது  


 மேலும் வாலாஜா அணைக்கட்டு ரோட்டில்லுள்ள பிள்ளையார் கோயில் திறந்திருந்ததால் மக்கள் வழிபட்டு சென்றனர்  மக்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருந்ததால்  வாலாஜா பஜார் வீதி முழுவதும்   திருவிழா போல்  காட்சியளித்தது

 இதனால்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்   ஒதுங்குவதற்கு இடம்மில்லாமல் வாலாஜா நகரமே திணறியது.