கடலூர் எம்.பியின் முந்திரி தொழிற்சாலையில் நடந்த சந்தேக மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை

 


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்  கோவிந்தராஜ் என்பவர் இவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக டிஆர்பி ரமேஷிற்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில்  கடந்த ஒரு வாரத்திற்கு முன்  வேலைக்கு சென்ற கோவிந்தராஜ் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பயத்தில் ஆழ்ந்து இருந்தனர். இந்த நிலையில்  சென்னையில் இருந்த கோவிந்தராஜன் அவர்களின் மகனுக்கு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் தொலைபேசியில் இருந்து உங்கள் தகப்பனார் இறந்து விட்டார் என்று தகவல் கூறியதாக கூறப்படுகிறது.

பின் அதன்பேரில் சென்னையில் இருந்து விரைந்து வந்த மகன் இறந்தவரின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் அறிந்து அதை சென்று பார்த்தபோது அவர் உடல் முழுவதும் காயங்களுடன், கண்ணம் காது போன்ற பல இடங்களில் காயம் இருந்துள்ளது இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தராஜன் உறவினர்கள் மற்றும் பாமகவினர் உயிரிழப்பு தொடர்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் நேற்று முன் தினம் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் ADSP கோமதி தலைமையில் பண்ருட்டியில் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் முதற்கட்டமாக கோவிந்தராஜ் அவர்களின் மகன் மற்றும் காடம்புலியூர் காவல் துறையினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விசாரணை கடலூர் எம்பி ரமேஷ் அவர்களின் தொழிற்சாலை ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் கோவிந்தராஜ் அவர்கள் காடம்புலியூர் காவல் நிலையத்தில் பலத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)