வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!

 


2020-2021 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய வருமான வரி சட்டத்தின்படி, 60 வயதுக்கு குறைந்த தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம். அதேசமயம் 60 முதல் 80 வயது வரையிலான மூத்த குடிமக்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுதோறும், ஜூலை 31ம் தேதிக்குள் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கும். 

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் அவகாசம் வழங்கப்பட்டுவருகிறது.கடந்த 2020-2021 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்தை தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் நிறைவடையும் நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2020-2021 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பர் 31ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)