கனிமவள கொள்ளைக்கு துணை போகும் சோதனைச் சாவடி காவலர்கள் : தமிழக – கேரள எல்லையில் பரபரப்பு!!

 


கன்னியாகுமரி : தமிழக கேரள எல்லையான களியக்காவிளை போலீசார் சோதனைசாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டதில் 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை காவல்துறைக்கான சோதனை சாவடி உள்ளது. இங்கு தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் சரக்கு வாகனங்கள் இந்த சோதனை சாவடியில் காவலர்கள் சோதனை செய்து சோதனை சாவடியில் பதிவு செய்த பிறகு கேரள செல்ல அனுமதிப்பார்கள்.

தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் வாகனங்களுக்கு களியக்காவிளை சோதனை சாவடியில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி பீட்டர் பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் அங்கு பணிபுரியும் காவலர்களிடம் இருந்து 15,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் எஸ். ஐ சைய்யது குசேன், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து, மற்றும் காவலர்கள் அசோகன் உட்பட 5 பேர் சோதனையில் இருந்தனர் .

இதைதொடர்ந்து அந்த காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கனிமவள கடத்தலுக்கு சோதனைச் சாவடியில் பணிபுரிந்த காவல்துறையினரும் உடந்தையாக செயல்பட்டது அம்பலமாகி உள்ளது

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு