மருத்துவ முகாம்களுக்கு வந்து செல்லும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆட்டோ சேவை

 
மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் அதின் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமையில் விசாரம் பகுதியில் மருத்துவ முகாம்களுக்கு வந்து செல்லும்  பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  இலவச ஆட்டோ‌ சேவையை டாக்டர்.சுரேஷ் பாபு பி எம் ஓ ,  தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி 

மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கோவிட்-19 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம்களுக்கு வந்து செல்ல இலவச ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வின் போது

ஜி முஹம்மத் பஹிம்,கே.ஓ. நிஷாத் அஹ்மத்,

அ. முஹம்மத் தமீம்,எச். முஹம்மத் ஹாஷிம்,கே.இத்ரிஸ் அஹ்மத்,அன்சர் ‌பாஷா,அப்துல் ஹலீம் ஆகியோர் உடனிருந்தனர்.