ஆற்காடு பேருந்து நிலையத்தில் விசிக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் சேலம் மோரூரில் விசிக கட்சியின் கொடியை ஏற்ற விடாமல் தடுத்து தடியடி நடத்தி  சாதிய வன்முறையாளர்களை தூண்டிவிட்ட காவல்துறையினரை கண்டித்தும்,கைது செய்யப்பட்ட கட்சியினரை விடுதலை செய்யக் கோரியும்  ஆற்காடு நகர செயலாளர்

 கே.பாக்கியராஜ் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆற்காடு தொகுதி செயலாளர் சிறுத்தை சின்னையன் முன்னிலை வகித்தார் 

ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவிதா சம்பத்,  அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் ரமேஷ் கண்ணா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாவட்ட பொறுப்பாளர் 

டி.சந்திரன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்

 அதனைத் தொடர்ந்து  மாவட்ட பொருளாளர் சம்பத்,நகர செயலாளர் கே.பாக்கியராஜ்,  மாம்பாக்கம் பாபு, சமூக நல்லிணக்க பேரவை சரவணன், மாதாங்கள் ராஜா, மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார், ஆகியோர் கண்டன உரையாற்றினர் 

நகர செயலாளர் பாக்கியராஜ் பேசுகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மோரூரில் விசிக கட்சியினர் கொடியினை ஏற்றுவதற்கு காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்று  கொடியை ஏற்ற சென்றனர்

 காவல்துறை அதிகாரி  அனுமதி கொடுப்பது போல் கொடுத்து விட்டு அங்குள்ள சாதி வன்முறையாளர்களை ரகசியமாக  தூண்டிவிட்டு கொடியை ஏற்ற விடாமல் நாடகமாடி போலீசாரை குவித்து அமைதியாக கொடியை ஏற்ற சென்ற விசிக கட்சியினர் மீது தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர் 

 சினிமா பாணியில்  போலீஸ் அதிகாரி இதனை அரங்கேற்றியிருக்கிறார் போலீசாரின் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது எனவே தமிழக அரசு வன்முறைக்கு காரணமாயிருந்த போலீசார் மீது  தகுந்த நடவடிக்கை  எடுத்து பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்து இருக்கிற விசிக கட்சியினரை விடுதலை செய்ய  வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் 

மேலும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களான அருள் ஈஸ்வரன், ஆயிலம் பிரபுதாஸ், அரும்பாக்கம் பிரபு, ராஜன், மேச்சேரி சீனிவாசன், மங்கையர்கரசி, ஊடக மையம் மணிவண்ணன்,  கானாகவி, எட்வின், புருஷோத்தமன், மற்றும் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)