ரயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்தவிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் : திருப்பதியைச் சேர்ந்த நபர் கைது

 


சென்னை : ஆந்திராவிற்கு கடத்தி சென்று கொண்டிருந்த 1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை ரயில்வே பறக்கும்படை பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள ரயில்வே போலீசார் கள் பல குழுக்களாகப் பிரிந்து தொடர்ந்து தீவிரமாக தனிப்படையினர் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, ரயில்வே கூடுதல் இயக்குனர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்படி, ரயில்வே காவல் துறை தலைவர் கல்பனா நாயக், ரயில்வே காவல்துறை துணைத்தலைவர் ஜெய கவுரி அறிவுரையின்படி, காவல் கண்காணிப்பாளர் ரயில்வே சென்னை இளங்கோ மேற்பார்வையில், நான்கு உட்கோட்ட கண்காணிப்பாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், தலைமையில் காவல்துறையினர் ரயில்வே காவலர்கள் 23 குழுக்களாகப் பிரிந்து, சென்னை மற்றும் மற்ற பகுதிகளுக்கு ஆயுதம் மற்றும் பணம் எடுத்துச் செல்கிறார்கள் என்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று 26-ஆம் தேதி சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலை ஜோலார்பேட்டை காவல் நிலைய தனிப்படையினர் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். அதில் D2 கோச் 24 பிரிவில் திருப்பதியைச் சேர்ந்த ஆந்திர மாநிலம் ரஜினி குமார் (43), என்பவருடைய உடமைகளை பரிசோதனை செய்ததில் ஹான்ஸ், கூல் லிப், குட்கா, பான்பராக் உட்பட மொத்த 17 ஆயிரத்து 915 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மொத்த எடை 42 கிலோ, எடை கொண்டது. இதன் மொத்த மதிப்பு 1 லட்சம் ஆகும். உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார் திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அதிகாரி வசம் அவரை ஒப்படைத்தனர். சிறப்பாக செயல்பட்டு போதை வஸ்துக்களை கைது செய்த தனிப்படையினர் ரயில்வே கூடுதல் இயக்குனர் அமலாக்கத்துறை சந்திப்ராய் ரத்தோர் பாராட்டினார். 24 மணி நேரமும் பொதுமக்கள் 1512 இலவச அழைப்பு மற்றும் 9962 500 500 என்ற செல் நம்பரில் ரயில்வே துறை குறித்த தகவல்களை காவலர்களுக்கு அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.