சாலையின் நடுவே மது அருந்திய கும்பல் – தட்டிக்கேட்டவரை தாக்கியதால் ஒன்று கூடிய ஊர்மக்கள்

 


சென்னையில் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம், இருதரப்புக்கு இடையே கடும் மோதலாக மாறியது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில், பண்ணை வீடு ஒன்றில் திருமண விழாவுக்கு வந்த சிலர், சாலையின் குறுக்கே காரை நிறுத்தி மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அவ்வழியாக சென்ற கவின் என்பவர் மதுபோதை கும்பலிடம் வழிவிடச் சொன்னபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அவர்கள் கவினைத் தாக்குவதைக் கண்ட ஊர் மக்கள், பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் இருதரப்புக்கு இடையே கடும் மோதலாக மாறிய நிலையில், இருசக்கர வாகனம் மற்றும் 2 கார்கள் சேதப்படுத்தப்பட்டன. மோதலில் சுரேந்தர் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவினுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பனையூர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை