ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த இவர் பிஎஸ்சி மற்றும் எம் ஏ பட்டப்படிப்பு முடித்து திருச்சி மாவட்டத்தில் 2005இல் துணை ஆட்சியர் பயிற்சி முடித்தார்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் 2006இல் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றினார் அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் 2008 நவம்பர் முதல் மாவட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றினார் 2009 மார்ச் முதல் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் பொது மேலாளராக பணியாற்றினார்
2011இல்நவம்பர் முதல் சென்னையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் இணை இயக்குனராக பணியாற்றினார் 2012 இல் சென்னையில் முதுநிலை மண்டல மேலாளராக பணியாற்றினார் அதனைத் தொடர்ந்து 2012 மார்ச் 2013 டிசம்பர் வரை சென்னையிலுள்ள தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல பொது மேலாளராகப் பணியாற்றினார்
2013 டிசம்பர் முதல் நீலகிரி மாவட்டம் முதல் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றினார் அதனையடுத்து 2014ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி முதுநிலை பட்டியலில் பதவி உயர்வு வழங்கப்பட்டது 2018-2020 இல் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் தனி அலுவலராக பணியாற்றினார்
2020 நவம்பர் முதல் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இயக்குனராக பணியாற்றினார் 2021 சென்னையில் உள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் செயல் உறுப்பினராக பணியாற்றினார் அதனைத் தொடர்ந்து 2021 செப்டம்பர் 10.09.21ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.