மீண்டும் பொய் சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி… சொன்னது வேறு, நடந்தது வேறு : இயக்குநர் தங்கர்பச்சான் காட்டம்

 


மின்கட்டண விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மீண்டும் பொய் சொல்வதாக இயக்குநர் தங்கர் பச்சான் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மாதாந்திர மின்கட்டண முறையை எப்போது அமல்படுத்துவீர்கள்..? என்று தமிழக அரசுக்கு இயக்குநர் தங்கர் பச்சான் அண்மையில் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக, சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இயக்குநர் தங்கர்பச்சனின் பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைத்ததாகக் கூறியிருந்தார்.

ஆனால், தனது பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தகவல் தவறானது என்றும், நான் சொன்னது வேறு.. அவரோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, செய்தது வேறு என்றுக் கூறி, இயக்குநர் தங்கர் பச்சான் பகீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் தங்கர் பச்சான் விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் 2வது முறையாக உண்மைக்கு புறம்பான தகவலை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாகவும், இது என்னுடைய விட்டின்‌ பிரச்சினை மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள அனைவரின்‌ பிரச்சினை என்பதையும்‌ அமைச்சருக்கு நினைவூட்டுவதாக இயக்குநர் தங்கர் பச்சான் மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எனது விட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின்‌ கட்டணம்‌ குறித்த என்‌ கோரிக்கையை உடனே சரி செய்து விட்டதாகவும்‌, நான்‌ அதற்குப்பின்‌ மன்னிப்பு கோரியதாகவும்‌ இரண்டாவது முறையாக மின்துறை அமைச்சர்‌ செந்தில்‌ பாலாஜி அவர்கள்‌ கேள்வி ஒன்றுக்கு சட்ட மன்றத்தில்‌ பதில்‌ அளித்துள்ளார்‌. உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும்‌ சட்டமன்றத்தில்‌ பதிவு செய்ததுடன்‌ ஒரு மாதத்திற்கு முன்‌ முதலமைச்சருக்கு நான்‌விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதில்‌ அளிக்க மறுக்கின்றார்‌.

எனது கோரிக்கை மின்‌ கட்டணத்தை சரி பார்க்கக்கோரி அல்ல. மாதாந்திர மின்‌ கட்டண முறையை செயல்‌ படுத்தாததினால்தான்‌ மின்‌ கட்டணம்‌ பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான்‌. முதலமைச்சர்‌ இது குறித்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின்‌ போதும்‌ திமுக தேர்தல்‌ அறிக்கையிலும்‌ மக்களிடத்தில்‌ கொடுத்த வாக்குறுதியைத்தான்‌ நிறைவேற்றும்படி கோரிக்கை விடுக்கின்றேன்‌. இது என்னுடைய விட்டின்‌ பிரச்சினை மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள அனைவரின்‌ பிரச்சினை என்பதையும்‌ அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன்‌. இப்பொழுதாவது
மின்துறை அமைச்சர்‌ என்‌ கோரிக்கையை உணர்ந்து முதலமைச்சரின்‌ கவனத்திற்கும்‌ கொண்டு செல்வார்‌ என நம்புகின்றேன், என தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)