கோவை முந்தியது சென்னை : மீண்டும் சதத்தை கடந்த மாவட்டங்கள்… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

 


சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று 1,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,37,010ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் இன்று 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 201 பேருக்கும், செங்கல்பட்டுவில் 116 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும், தஞ்சையில் 119 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,217 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,537 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 85 ஆயிரத்து 244ஆக அதிகரித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)