பேக்கரியில் இருந்து செல்போனை திருடி சென்ற மர்ம நபர்... காட்டிக்கொடுத்த சிசிடிவி..!
கரூரில் மர்ம நபர் ஒருவர், பேக்கரியில் இருந்து செல்போனை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பேருந்து நிலையம் வெளியே அமைந்துள்ள பேக்கரியில் திண்பண்டம் சாப்பிட்ட மர்ம நபர் பணம் கொடுப்பதற்காக கல்லாப்பெட்டி அருகே வந்தார். அப்போது மேஜையின் மீது ஊழியர் ஒருவரின் செல்போன் இருந்ததை பார்த்த அவர். தனது செல்போனை அந்த செல்போன் மீது வைத்தார்.
பின்னர் ஊழியரிடம் 500 ரூபாயை கொடுத்த அவர், ஊழியர் சில்லரை எடுக்கும் நேரத்தில் இரண்டு செல்போன்களையும் எடுத்து தனது பைக்குள் போட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.