பீஸ்ட்’, ‘வலிமை’ என முன்னணி நடிகர் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவரும் யோகி பாபு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாயகனாக அவர் நடித்த ‘மண்டேலா’ சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக, யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘பேய் மாமா’ இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில், யோகி பாபு ஹீரோவாகவும் ஓவியா ஹீரோயினாகவும் நடிக்கும் ’கான்ட்ராக்டர் நேசமணி’படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தை ஸ்வஸ்தீஸ் இயக்குகிறார். பூஜையில், யோகி பாபு, ஓவியா, டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.