காவேரிப்பாக்கம் அருகே முதியோரிடம் கொள்ளையர்கள் கைவரிசை போலீசார் வலைவீச்சு

 ராணிப்பேட்டை மாவட்டம் கட்டளை கிராமம் ஆதிகேசவ பெருமாள்


கோவில் தெருவைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மகன் வீரசிம்மன் வயது 65 என்பவர் கடந்த

02.09.21  அன்று  காவேரிப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியிலிருந்து தனது கணக்கில் ரூபாய் 2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு

 மிதிவண்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கட்டளைக்கு செல்லும் வழியில் உள்ள நாகலோகசுந்தரி அம்மன் கோவில் அருகே சுமார் 12 மணி அளவில்  வந்து கொண்டிருந்தபோது  பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பத்து ரூபாய் பணம் கீழே உள்ளது  உங்களுடையதா என்று கூறி வீரசிம்மனை திசைதிருப்பி விட்டு

 மிதிவண்டியில் இருந்த பணத்தை எடுத்துச் சென்று விட்டனர்.வீரசிம்மன்  சம்பவத்தைக் குறித்து காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார் புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.