ஒரு விவசாயி பிரச்சனை தீர்க்க முடியாமல் என்னாத்த கிழிக்கிறீர்கள் - ஆட்சியர் முன் கேள்விகேட்ட விவசாயிகள்

 தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் தலைமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய சங்கத்தினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து வந்தனர். கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அலுவலக வாயிலிருந்து தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கத்தினர், திடீரென 50 க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கோஷமிட்டவாறு, உள்ளே நுழைந்தனர்.


இதனையறிந்த போலீசார், கோஷமிடாமல் உள்ளே செல்ல வேண்டும் என மறித்தால், விவசாயிகள் அமைதியாக செல்கின்றோம் என்று கூறி விட்டு, கூட்டரங்கிற்கு சென்றனர். அப்போது உள்ளே சென்ற போது, விவசாய சங்கத்தினர் திடீரென, மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திலுள்ள அனைவரையும் கண்டிக்கின்றோம், என்று கோஷமிட்டபடி அனைவரும், திரண்டு சென்று, மாவட்ட கலெக்டர் மேஜையின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஒரு விவசாயி பிரச்சனை தீர்க்க முடியாமல் என்னாத்த கிழிக்கிறீர்கள் - ஆட்சியர் முன் கேள்விகேட்ட விவசாயிகள்


அப்போது, தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, தாலுக்கா, பூவத்துார் ஊராட்சி, பொட்டலங்குடிகாட்டை சேர்ந்த ராமசாமி மகன் திருவேங்கடத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் நஞ்செய் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த போதும், திருவேங்கடத்தின், வயலுக்கு செல்லும் பொது, பாதையை சில சமூக விரோதிகள், போலி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கை கோர்த்து கொண்டு, திருவேங்கடத்தின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பொது பாதையை ஆக்கிரமித்து கொண்டு அறுவடை இய்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் தடுத்து விட்டனர்.


இதனால் விளைந்துள்ள நெற்கதீர்களை அறுவடைசெய்ய முடியாத காரணத்தால், முற்றிலும் மண்ணோடு மண்ணாக சாய்ந்துள்ளதால், முளைத்து மடித்து விட்டது. இது போன்ற நிலையால், அனைத்தும் வீணாகி விட்டதால், சுமார் 5 லட்சம் நஷ்டமாகி விட்டது. இததொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு, தலைமை செயலாளர், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர், வேளாண்மை துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர்  உள்ளிட்ட அனைவருக்கும் பலமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுக்கள் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், விவசாயின் நிலையை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஏற்கனவே 4 போகம் பாதிக்கப்பட்ட நிலையிலும், தற்போது நடைபெறவுள்ள சம்பா சாகுபடியும், நடவு செய்ய முடியவில்லை.



ஒரு விவசாயி பிரச்சனை தீர்க்க முடியாமல் என்னாத்த கிழிக்கிறீர்கள் - ஆட்சியர் முன் கேள்விகேட்ட விவசாயிகள்


திருவேங்கடம் கொடுத்த மனுக்கள் மீது ஒருதலைபட்சமாக மாவட்ட நிர்வாகம் நடந்து கொள்வதால், மாவட்ட கலெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து,  பாதிக்கப்பட்டவிவசாயிக்கு  1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், முதியவரான விவசாயி நிலத்தை அபகரிப்பது குறித்து பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கூட மனு அளித்தும்,  விவசாய பிரச்சனையை தீர்க்க முடியாமல் இங்கு நீங்கள் என்னத்த கிழிக்கிறீர்கள். நாங்கள் கொடுத்த மனுக்கள் கழுதைக்கு இரையாக்குவது போல் துாக்கி வீசி விடுகிறீர்கள். மாவட்ட கலெக்டரான உங்களால் எதுவும் முடியாது,


நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டரை கண்டித்தும், உடனடியாக தீர்வு காண வேண்டும், அதுவரை கூட்டரங்கில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தரையில் அமர்ந்து, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது, தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க புகழேந்தி மற்றும் போராட்டக்காரர்களை, போலீசார் கைது செய்ய வந்த போது, என்னை கைது செய்தால், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கொளுந்து விட்டு எரியும் என கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து பிரச்சனை விஸ்வரூபமானதால், மற்ற விவசாய சங்கத்தினர்கள், புகழேந்தியை சமாதானம் செய்தனர். அப்போது, மாவட்ட கலெக்டரிடம், வழங்கிய மனுவை காண்பித்து, நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என ஆதாரத்தை கோபத்துடன் காண்பித்தார்.


பின்னர், தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கத்தினருக்கு, ஆதரவாக கூட்டத்திற்கு வந்த விவசாய சங்கத்தினர், மாவட்ட கலெக்டர், உடனடியாக தீர்வு காண வேண்டும், தவறும் பட்சத்தில் அனைத்து விவசாய சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோஷமிட்டதால், கூட்டத்தில் பெரும் பரபரப்பானது.  இதனையடுத்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலீவர், கோட்டாட்சியர் வேலுமணியிடம், உடனடியாக சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டார். பின்னர், மாவட்ட கலெக்டர் பேசுகையில், உங்களது மனுவை நான் பார்க்க வில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பேரில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் விவசாய குறை தீர்க்கும் கூட்டம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி, பிரச்சனைக்குரிய சாலையை மீட்டு, தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)