கோடநாடு எஸ்டேட் கணினி இயக்குநர் மரணத்தில் வெளியான திடுக்கும் உண்மை… வசமாக சிக்கும் முக்கியப் புள்ளி..!!
நீலகிரி : கோடநாடு எஸ்டேட்டில் கணிணி ஆப்ரேட்டராகபணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ்குமாரின் தந்தை போஜன் விளக்கம் அளித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி தற்கொலை செய்துகொண்ட கொடநாடு எஸ்டேட்டில் கணிணி ஆப்ரேட்டராக பணி புரிந்த தினேஷ்குமார் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை 2 நாட்களாக நடத்தி வருகின்றனர்.
நேற்று தினேஷ்குமார் தந்தை போஜன் மற்றும் அவரது மனைவி கண்ணகியிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று தினேஷின் தங்கை ராதிகாவிடம் டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் காலை 11.30 மணி முதல் மதியம் 2.17 மணி வரை விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு தினேஷின் தந்தை பேட்டியளித்தார் அவர் கூறியதாவது, தினேஷ் தனது வீட்டில் தான் தற்கொலை செய்து கொண்டார். அன்று நான் பக்கத்து கிராமத்தில் இரங்கலுக்கு சென்றிருந்தேன். அப்போது மகன் மயக்க முற்றிருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
நான் அங்கிருந்து வருவதற்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். அதை தான் போலீசாரிடம் தெரிவித்தேன் . நான் அன்று என்ன தெரிவித்தேனோ அதைதான் இன்றும் தெரிவித்தேன்.
யாரிடம் இருந்து அவருக்கு எந்த வித அழுத்தமும் இல்லை கொடநாடு எஸ்டேட்டிலிருந்தோ நண்பர்களிடமிருந்தோ எந்த வித அழுத்தம் தரப்படவில்லை. அவருக்கு என்ன மன உளைச்சல் என்று எனக்கு தெரியாது. எப்போதும் இருப்பதுபோல்தான் இருந்தான் ஏன் தற்கொலை செய்தார் என தெரியவில்லை.
பிரேத பரிசோதனையில் போஸ்ட்மாட்டத்தில் உள்ளது உங்களது கையெழுத்தா என விசாரித்தனர். நான் எழுதிக் கொடுத்தார்கள் கையெழுத்து போட்டேன் என்றேன் நேற்று என்னையும் என் மனைவியையும் விசாரணை செய்தனர்.
இன்று மகளை விசாரணை செய்தனர். மறுபடியும் தற்போது விசாரிப்பதால் யார் வந்த கேட்டாலும் இதைதான் சொல்லுவோம் மேற்கண்டவாறு அவர் கூறினார்.