ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றங்களுக்கு புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம்
ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் சிடம் ஆணையைப் பெற்று கொண்டனர்
ராணிப்பேட்டை கூடுதல் அமர்வு நீதிமன்ற அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக சங்கர், ராணிப்பேட்டை சார்பு நீதிமன்ற கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக ஜெயக்குமார், அரசு தரப்பு வழக்கறிஞராக சிவகுமார்,
மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக அரசு தரப்பு வழக்கறிஞராக நந்தகுமார் ஆகியோரும் ,அரக்கோணம் சார்பு நீதிமன்ற கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக குமரகுரு, அரக்கோணம் சார்பு நீதிமன்றம் அரசு தரப்பு வழக்கறிஞராக ஒழிப்பு நில ஆர்ஜித நீதிமன்ற வழக்கறிஞராக பூபதி,
உரிமையை நீதிமன்ற அரசு தரப்பு வழக்கறிஞராக ஆல்வின் தேவகுமார் , சோளிங்கர் உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞராக சுதாகர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் நியமன ஆணை பெற்றனர்
அதனைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.