கலவை நல்லூரில் ஜெய்பீம் இரவுப் பள்ளி கூட்டமைப்பின் சார்பாக புத்த விஹார் பவுர்ணமி விழா




கலவை அடுத்த நல்லூர் கிராமத்தில்   ஜெய்பீம் இரவுப் பள்ளி கூட்டமைப்பு மற்றும் புத்த விஹார் சார்பிலும்  நல்லூரில் செயல்பட்டுவரும்    சித்தார்த்தர் இலவச இரவு பாடசாலையில் புத்த விஹார் பவுர்ணமி விழா நடைபெற்றது  

இந்த விழாவிற்கு சித்தார்த்தர் சமூக சேவை மையம் அறக்கட்டளையின் தலைவர் பி.ராஜசேகரன் தலைமை தாங்கினார் புத்தரின் சிறு திருவுருவ சிலைக்கு முன்பாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து வந்தனம் செலுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்




இந்த நிகழ்ச்சியில்  சித்தார்த்தர் இரவு பள்ளி மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மாணவர்களும், இரவுப் பள்ளி ஆசிரியர்கள் மீனாட்சி, கண்ணகி ஆகியோரும்  ஏராளமான கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்  நிகழ்ச்சியில் பேசிய அவர்  புத்தரின் அறநெறிகளை மாணவர்களுக்கு எடுத்து விளக்கினார் அன்பு, சமத்துவம், சகோதரத்துவம் சமூக நீதி, மனிதநேயம் 

தங்கள் வாழ்க்கையின் அடிப்படை கோட்பாடு கொள்கையை ஏற்று வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார் மேலும் பேசிய அவர் மானிட வாழ்வில் கல்வி மிக முக்கியமானது புரட்சியாளர் அம்பேத்கர்  கல்வியை காதலித்தவர்,

 தான் கற்ற கல்வியால் மக்களுக்கு விடிவெள்ளியாக விளங்கியவர் அதுபோல நீங்களும் கல்வியை கற்று முன்னேறி வாழ்வில் சிறந்த மனிதர்களாக விளங்க வேண்டும் என்று பேசினார்

நிகழ்ச்சியின் இறுதியில் இரவு பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், சுண்டல்,பிரசாதம்,இனிப்பு வழங்கினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை