உறும்பும் பன்றிகள் உறக்கத்தில் அதிகாரிகள் உற்சாகத்தில் கடலூர் பன்றி வளர்ப்பவர்கள்

 


கடலூர் முதுநகரில் ரோடுகளில் குறுக்கே நெடுக்கும் சுற்றித்திரியும் பன்றிகளால், தொடர்ந்து வாகன ஓட்டிகள் உயிர்பலியும் நகர குடியிருப்புவாசிகளுக்கு பல வித கொரானா போல் புதுவித நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. 

கடலூரில் கோண்டூர் முதுநகர் திருப்பாதிரிப்புலியூர்  புதுநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்

பல்லாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் 45க்கும் மேற்பட்ட வார்டுகளில் அரசு அலுவலகங்கள். குடியிருப்புகள். பள்ளிகள். ஆலயதிருத்தலங்கள். அரசியல் அலுவலகங்களும் பல்வேறு பொதுநல அமைப்பின் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன


சிதம்பரம் புதுவை விருத்தாச்சலம் போன்ற பல்வேறு ஊர்களுக்குச் சென்று வர கடலூர் கிழக்கு கடற்கரை சாலையான கடலூரை அதிக வாகனங்கள் கார்கள் இரு சக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினம் தோறும் சென்று வருகிறது இதில் பெரும்பாலான விபத்துகள் கால்நடைகளால் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது

விபத்து குறித்து பொதுமக்கள்


அதிகாரிகளிடம் பன்றி தொல்லை குறித்தும் பல புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும்  இதுவரை எடுக்காமல் உள்ளதால் புகார் மனு உறங்குகிறதா அல்லது அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பொதுமக்களும் பொதுநல அமைப்பினரும்

கடலூர் நகர பகுதிகளில் தெருக்களில் உலாவும் பன்றிகள் மாடுகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் கடலூர் மக்களின் சுகாதாரம். குடிநீர். அடிப்படை வசதிகளை எப்படி செய்வார்கள் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வசூல் லஞ்சம் பெறுவது எப்படி இந்தப் பணிகளில் கூடுதல் லஞ்சம் பெறலாம் என்று சிலர் வாட்ஸ்அப் 

முகநூல் வாயிலாக பீம்ஸ்  போட்டு கடலூர் பெருநகராட்சியை கலாய்த்து வருகின்றனர்  

பன்றிகளை பராமரிக்க பட்டி அடைத்து வளர்க்க வேண்டியவர்கள் சிலர், மேய்ச்சலுக்கு விட்டிருப்பதால், பன்றிகள் தெருக்களில் மட்டுமல்லாது, வீடுகளிலும், சகதியுடன் புகுந்து விடுகின்றன. இதனால், நகர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, பல வித நோய்கள் பரவும் அபாயத்தில் கடலூர் நகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் 

பலமுறை அதிகாரிகளுக்கு புகார் மனுவாக அளித்ததாகவும் மனுமீதான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணம் குறித்து பொதுமக்கள் கூறுகையில் கடலூர் நகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபடுபவர்கள் தான் பன்றிகள் அதிகப்படியாக நகர பகுதியில் வளர்த்து வருவதாகவும்

கடலூர் நகராட்சி எல்லையில் பன்றி உலாவி வருவதற்கு பன்றி ஒன்றுக்கு கணக்கிட்டு மாதம் ஒருமுறை மொத்த பன்றிகளுக்கும் கமிஷன் செல்வதாகவும் கூறுகின்றனர் இதனால்தான் பன்றியின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறத

கடலூர் செய்தியாளர்-தீப்பொறி

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்