சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை பெற்றது தொண்டாமுத்தூர் காவல் நிலையம்: காவல் ஆய்வாளரிடம் வழங்கப்பட்டது!!

 


கோவை: தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் பெற்றது இந்த விருது இன்று ஆய்வாளரிடம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் காவல் நிலையத்தை சிறப்பாக பராமரித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் 2019ம் ஆண்டிற்கான மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருதானது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த விருதினை இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அப்போதையே தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக பணியாற்றிய நவநிதகிருஷ்ணனுக்கு வழங்கினார். மேலும், இவ்விருதினை பெற்றதற்கு ஆய்வாளருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.