திருச்சியில் தீக்குளிப்பு நாடகம்…! ஐடியா கொடுத்த வழக்கறிஞர் மீது வழக்கு…!!!

 


திருச்சி: திருச்சி ஜஜி அலுவலகம் முன்பு தீக்குளிப்பு நாடகத்தை அரங்கேற்ற ஐடியா கொடுத்த பெரம்பலூர் வக்கீல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் செட்டியார் மற்றும் அவரின் உறவினர் சிவநடராஜன் நேற்று காலை திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். இதை பார்த்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து அவர்களை மீட்டனர். விசாரணையில் நில அபகரிப்பு, பண விவகாரம் தொடர்பாக பெரம்பலூரில் காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தற்கொலைக்கு முயன்றதாக அவர்கள் கூறினர். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதில் ’ஊத்து தலைவா ஊத்து’ என பின்னால் ஒருவர் இந்த நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது

வீடியோ அடிப்படையில் தொடர் விசாரணை நடத்திய போலீசார் ராஜ்செட்டியார், சிவநடராஜன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்த நிலையில் வீடியோவை எடுத்து, தற்கொலைக்கு தூண்டியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம், நெய்குப்பை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயவர்த்தனன் (35) தற்கொலை நாடகம் நடத்த ஐடியா கொடுத்தது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து வழக்கறிஞர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளை பொது இடத்திற்கு கொண்டுவருதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)