ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை....
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள வெங்கடாபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் வேல்முருகன் இவரது மனைவி நவமணி ( வயது 29 ) இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நவமணி சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில் இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மீண்டும் அவருக்கு வயிற்று வலி அதிகமான காரணத்தினால் இதனால் மனவேதனையடைந்த நவமணி வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து திமிரி போலீசாருக்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நவமணி உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.