மதுபோதையில் மாடல் அழகி அடாவடி : ராணுவ வாகனத்தை எட்டி உதைத்து சேதப்படுத்தி வாக்குவாதம்!!
மத்திய பிரசேதம் : மதுபோதையில் இளம்பெண் ஒருவர் ராணுவ வாகனத்தை சேதப்படுத்தி அட்டகாசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியர் சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை மறித்த இளம் பெண் வாகனத்தில் அமர்ந்து செல்போன் பேசியபடி வாகனத்தின் ஹெட்லைட்டை காலால் உதைத்து சேதப்படுத்தி வாக்குவாதம் செய்தார்.
பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர், இளம்பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் இளம்பெண் டெல்லியை சேர்ந்த மாடல் என்றும், ஒரு நிகழ்ச்சிக்காக குவாலியர் வந்ததும், அங்கு தனது தோழிகளுடன் ஏற்பட்ட தகராறில் சாலைக்கு வந்து அடாவடி செய்ததும் தெரியவந்தது.
மதுபோதையில் இளம்பெண் அட்டகாசம் செய்த காட்சிகள் வைரலாகி வருகிறது.