செல்போன் கடை உரிமையாளருடன் பெண் போலீஸ் லீலை : காக்கி சட்டை எடுத்து ஆதாரத்துடன் புகார் கொடுத்த மனைவி!!

 


திருமணமான பெண் காவலருடன் கள்ளத் தொடர்பில் வைத்த செல்போன் கடை உரிமையாளர் குழந்தை மற்றும் மனைவியை அடித்து துன்புறுத்தி விரட்டிய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த காதல் திருமணம் செய்துகொண்ட கார்த்தி – வனிதா தம்பதியினருக்கு, 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் கரூரில் செல்போன் கடை வைத்துள்ளார்.

காதல் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்தி வந்த கார்த்தி – வனிதா தம்பதி வாழ்வில் சூறாவளியை வந்து இறங்கினார் கரூர் ஆயுதப்படையில் பணியாற்றும் பெண்போலீஸ் கெளசல்யா.

கரூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் கௌசல்யாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. செல்போன் கடைக்கு வந்த கெளசல்யாவுக்கு கார்த்திக் உடன்பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. பணிமுடிந்ததும் கெளசல்யா நேராக கார்த்தியின் செல்போன் கடைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதன் காரணமாக கார்த்திக் செல்போன் கடையில் இருந்து கொண்டு வீட்டிற்கே செல்வதில்லை.

இது குறித்து கார்த்தியை தொடர்புக்கொண்டு வனிதா கேட்டபோது கடையில் வேலை அதிகமாக இருப்பதால் வீட்டிற்கு வர முடியவில்லை என பொய் சொல்லி வந்துள்ளார். கார்த்தியின் வார்த்தையில் சந்தேகமடைந்த வனித நேராக கடைக்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது கடையில் பெண் காவலர் கெளசல்யாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இதன்காரணமாக கோபமடைந்து கணவரிடம் கேட்டபோது நான் அப்படித்தான் இருப்பேன் நீ வேணும்னா வீட்டுக்குப் போ என்று சொல்லி மிரட்டி துன்புறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து, வனிதா பசுபதிபாளையம், தாந்தோன்றிமலைகாவல் நிலையங்களில், கணவர் மற்றும் கள்ளத் தொடர்பில் இருந்து பெண் காவலர் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மன வேதனையில் இருந்துள்ளார். இதற்கிடையில் கார்த்திக் பெண் காவலரை நேராக வீட்டிற்கு அழைத்து வந்தே கும்மாளம் அடிக்க தொடங்கினார். இதை கேட்ட மனைவியை அடித்து துன்புறுத்திய கார்த்திக், குழந்தையோடு வீட்டை விட்டு விரட்டி உள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையுடன் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கதியாக தெருவில் இருந்துள்ளார். பெற்றோரை எதிர்த்து கார்த்திகை காதல் திருமணம் செய்து கொண்டதால் தாய் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த வனிதாவின் தாய் மீண்டும் வனிதாவிற்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறார். புகார் கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், செல்போன் கடைக்கு சென்று அங்கே கணவர் பெண்காவலர் கள்ளத்தொடர்பில், இருந்தபோது பெண்காவலர் அணிந்திருந்த காவலர் உடையை எடுத்துக்கொண்டு நேராக மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க குழந்தையுடன் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் பெண்ணின் தாய் வந்தனர்.

காதல் திருமணம் செய்துகொண்டு, ஒரு பெண்காவலருடன் கள்ளத்தொடர்பு இருந்து மகளை துன்புறுத்தி அடித்து விரட்டுவதாக கூறிபாதிக்கப்பட்ட பெண் மற்றும் பெண்ணின் தாய் புகார் அளித்தனர்.

திருமணமான பெண்காவலருடன் கள்ளத் தொடர்பில் இருந்து கொண்டு குழந்தை மற்றும் மனைவியை அடித்து துன்புறுத்தி விரட்டிய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)