தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..!!

 


சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையர் கே.பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சிபி சக்ரவர்த்தி சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஓம்பிரகாஷ் மீனா சென்னை பெருநகர் கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக ஜி.சந்தீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக ரஜத் ஆர் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அங்கித் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா, திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறம் துணை காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா