அரசு அலுவலங்கங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 62 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
சேலத்தில் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவனர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத 62 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மற்றொரு பகுதியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு பிரிவினர் கைது செய்தனர்.
சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு பிரிவினருக்கு ரகசிய புகார் வந்துள்ளது. அதன்பேரில் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த அதிரடி சோதனையில் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 62 ஆயிரம் மற்றும் சந்தேகத்திற்குரிய சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சார்பதிவாளர் இந்துமதி மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் பத்திர பதிவுற்கு கூடுதல் பணம் பெறப்பட்டுள்ளதா, பணத்திற்காக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் காவேரி. கோவை மண்டலத்தில் சர்வாதிகாரி போல் செயல்பட்டு வந்த செல்வகுமார் சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவை மண்டலத்தில் இவரை மீறி சாதாரண ஊழியர் முதல் டிஐஜிக்கள் வரை அவருக்கு வேண்டியவர்கள் அல்லது அவரால் மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள விஐபிக்களுக்கு சொத்துக்கள் வேறு நபர்களுக்கு மாற்றப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சேலம் பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தாத்தா பெயரில் உள்ள நிலத்தின் பட்டாவை தந்தையின் பெயருக்கு மாற்றம் செய்வது குறித்து ஏர்வாடி வாணியம்பாடி கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி மற்றும் உதவியாளர் உதயகுமாரை அணுகியுள்ளார். அப்போது லஞ்சம் கேட்பதால் செல்வகுமார் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பிரிவு அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி மற்றும் உதவியாளர் உதயகுமார் ஆகியோர் புகார்தாரர் இடமிருந்து 3500 ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்றபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்களால் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் பீதியடைந்துள்ளனர்.