ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
காவேரிப்பாக்கம் உதயநகரை சார்ந்த வெங்கடேசன் வயது 58 என்பவர் சிப்காட் பெல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் இவர் கடந்த 22.9.2018 அன்று ராணிப்பேட்டை முத்துக்கடை ராணிப்பேட்டை எம் பி டி சாலை முத்துக்கடை முக்கியம்மன் கோயில் அருகிலிருந்து வாலாஜா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது
இவரின் பின்புறமாக அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ,வந்த லாரி இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதனால் இவருடைய மனைவி பிள்ளைகளான மனைவி ரமணி ,மகன் கௌதம் மகள்கள் தீபிகா,
சாய்ரம்யா ஆகியோர் நஷ்ட ஈடு கேட்டு பியூச்சர் ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பனி மேல் ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் 09.09.21ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், நீதிபதி ரேவதி ஆகியோர் கொண்ட குழுவினர் பியூசர் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 50 லட்சம் வழங்கிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்
இந்த நிகழ்வின் போது மனுதாரரின் வழக்கறிஞர் அண்ணாதுரை, பியூச்சர் ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பெனியின் வழக்கறிஞர் துளசிமணி செல்வம், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.