கோர்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சண்டை… வக்கீல் ஆடையில் ரவுடிகள் அட்டகாசம் : 4 பேர் சுட்டுக்கொலை.. தலைநகரில் அதிர்ச்சி!! (வீடியோ)


 டெல்லி : டெல்லி ரோஹிணி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் ரவுடி தாதா ஜிதேந்தர் கோகி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கதக பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி ஆஜரானார். அப்போது, வழக்கறிஞர்கள் உடையில் இருந்த சில மர்ம நபர்கள் திடீரென நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ரவுடி ஜிதேந்தர் கோகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். அதில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் 3 பேர் உயிரிழந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜரான ரவுடியை, மற்றொரு ரவுடி கும்பல் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.