அமெரிக்காவில் அதிவேகத்தில் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து: 3 பயணிகள் பலி…பலர் படுகாயம்..!!


 வாஷிங்டன்: அமெரிக்காவில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 3 பயணிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோவில் இருந்து சியாட்டில் நோக்கி, 8 பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 4 மணியளவில் வடக்கு மோன்டானா பகுதியில் தடம்புரண்டது.

ரயிலில் 141 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஏராளமான பயணிகள் காயமடைந்துள்ளனர். எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.