தமிழ்நாடு பார்டர்.. ரேவ் பார்ட்டி.. நிர்வாண நடனம்.. நடனமாடிய பெண்கள் உட்பட 35 பேர் கைது

 தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக வார இறுதி நாட்களில், விடுமுறை நாட்களில் இரவு நேர பார்ட்டிகள் நடத்தும் வழக்கம் அதிகரித்து வந்துள்ளன. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வழக்கமாக நடைபெற்று வந்த இதுபோன்ற பார்ட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகம்- தமிழ்நாடு எல்லை பகுதியில் பெங்களூர் நகரில் உள்ள ஆனெக்கல் என்ற இடத்தில் தனியார் சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நேற்று இரவு ரேவ் பார்ட்டி எனப்படும் ஆபாச நடனம் மற்றும் மது விருந்து நடத்தப்படுவதாக ஆனெக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.RAVE PARTY | தமிழ்நாடு பார்டர்.. ரேவ் பார்ட்டி.. நிர்வாண நடனம்.. நடனமாடிய பெண்கள் உட்பட 35 பேர் கைது


இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு மிகவும் சத்தமான இசையுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. போலீசார் அங்கு சென்றபோது ஐ.டி. நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் என 40-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்தனர். அவர்களில் சில பெண்களும், ஆண்களும் நிர்வாணமாக ஆடிக் கொண்டிருந்தனர்.


இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை உடனடியாக சுற்றி வளைத்தனர். போலீசார் திடீரென்று உள்ளே வந்ததால், அங்கிருந்த பலரும் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். போலீசார் இந்த இரவு நேர ரேவ் பார்ட்டியில் பங்கேற்ற 35 பேரை கைது செய்தனர். அவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவார். விசாரணையில் அவர்களில் பெரும்பாலோனார் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்று தெரியவந்துள்ளது. சிலர் கல்லூரி மாணவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
RAVE PARTY | தமிழ்நாடு பார்டர்.. ரேவ் பார்ட்டி.. நிர்வாண நடனம்.. நடனமாடிய பெண்கள் உட்பட 35 பேர் கைது


இந்த பார்ட்டியில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் போலீசார் 35 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். தப்பிச்சென்ற எஞ்சியவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள், மதுபாட்டில்கள், வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


உடனடியாக, கைது செய்யப்பட்ட 35 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அங்கு நிர்வாணமாக நடமானடிக்கொண்டிருந்த பெண்கள் நடன அழகிகளாக பணிபுரிந்து வருபவர்கள் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் செல்போன் செயலி மூலமாக முன்பதிவு செய்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
RAVE PARTY | தமிழ்நாடு பார்டர்.. ரேவ் பார்ட்டி.. நிர்வாண நடனம்.. நடனமாடிய பெண்கள் உட்பட 35 பேர் கைது


தமிழக கர்நாடக எல்லையில் சொகுசு விடுதியில் நடைபெற்ற ரேவ் பார்ட்டியில் குடிபோதையில் நிர்வாணமாக பெண்கள், ஆண்கள் நடமானடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது, அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சொகுசு விடுதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)