அக்.,31 வரை மதம், அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை : ஊரடங்கையும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

 


சென்னை : தமிழகத்தில்‌ திருவிழாக்கள்‌, அரசியல்‌, சமூகம்‌ மற்றும்‌ மதம்‌ சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர்‌ 31-ம்‌ தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர்‌ மு.க. ஸ்டாலின்‌ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பொதுமக்கள்‌ நலன்‌ கருதி, அதிகப்படியான பொதுமக்கள்‌ கூடும்‌ நிகழ்வுகளான திருவிழாக்கள்‌, அரசியல்‌, சமூகம்‌ சார்ந்த மதம்‌ சார்ந்த கூட்டங்களுக்குத்‌ தற்போது உள்ள தடை அக்டோபர்‌ 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

தடுப்பூசி நடவடிக்கை:-

நம்‌ மாநிலத்தில்‌ தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள நபர்களில்‌ சுமார்‌ 12 சதவிகிதம்‌ நபர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள்‌ போடப்பட்டுள்ளது. 45 சதவிகித நபர்களுக்கு ஒரு தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்‌ தொற்றின்‌ மூன்றாம்‌ அலையை தடுப்பதற்கு தடுப்பூசியின்‌ பங்கு மிகவும்‌ முக்கியமானது என்பதை கருத்தில்‌ கொண்டு, அரசு தடுப்பூசி வழங்குவதை ஊக்குவித்து வருகிறது. தினந்தோறும்‌ சுமார்‌ மூன்று இலட்சம்‌ தடுப்பூசிகள்‌ என்ற அளவில்‌ இருந்ததை, தற்போது சுமார்‌ ஐந்து இலட்சம்‌ என்று அதிகரித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தலைவர்களின்‌ சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்‌ நிகழ்ச்சிகள்‌:-

இந்திய திருநாட்டின்‌ விடுதலைக்காக அரும்பாடுபட்ட தன்னிகரில்லாத்‌ தலைவர்களையும்‌ தமிழ்மொழி வளர்ச்சிக்காக அல்லும்‌ பகலும்‌ உழைத்த அறிஞர்‌ பெருமக்களை புகழ்ந்திடவும்‌, அவர்களது பிறந்தநாள்‌ மற்றும்‌ நினைவு நாள்‌ நிகழ்ச்சிகள்‌ அரசால்‌ நடத்தப்பட்டு வருகிறது, தற்போதுள்ள கோவிட்‌-19 நோய்த்‌ தொற்று சூழலில்‌, மேற்கண்ட தலைவர்களின்‌ சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்‌ நிகழ்ச்சிகளின்போது, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மட்டும்‌ உரிய சமூக இடைவெளியைக்‌ கடைப்பிடித்து மாலை அணிவிக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சிகளில்‌ மரியாதை செய்யப்படும்‌ தலைவர்களின்‌ குடும்பத்தை சார்ந்தவர்களும்‌ (5 நபர்களுக்கு மிகாமல்‌) பதிவு பெற்ற அரசியல்‌ கட்சித்‌ தலைவர்களும்‌ (5 நபர்களுக்கு மிகாமல்‌) சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்‌ தலைவரிடம்‌ முன்‌ அனுமதி மற்றும்‌ வாகனத்திற்கான அனுமதியைப்‌ பெற்று, அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌, தீவிரமாக நோய்த்‌ தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள்‌ அமைத்து கண்காணிக்கப்படும்‌. அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள்‌ தொடர்புடைய துறைகளால்‌ கண்டிப்பாக அமல்படுத்தப்படுத்தப்பட வேண்டும்‌.

மாணவர்‌ நலன்‌:-

மாணவ, மாணவியர்களின்‌ கல்வி மற்றும்‌ உளவியல்‌ நலன்‌ பேணும்‌ வகையில்‌ 9), 10, 11 மற்றும்‌ 12-ஆம்‌ வகுப்புகளும்‌, கல்லூரிகளும்‌ சுழற்சி முறையில்‌ உரிய கெரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி ஆசியர்கள்‌ மற்றும்‌ பெற்றோர்களின்‌ கட்டுப்பாடான ஒத்துழைப்புடன்‌ இயங்கி வருகிறது. பள்ளி மற்றும்‌ கல்லூரி வளாகங்களில்‌ அனைத்து நோய்பரவல்‌ தடுப்பு நடவடிக்கைகளையும்‌ தொடர்ந்து மேற்கொள்ளுமாறு உள்ளாட்சி பொறுப்பாளர்கள்‌, மருத்துவத்துறை மற்றும்‌ பள்ளிக்‌ கல்வித்துறை அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)