2 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகிய ஹெச். ராஜா : நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

 


பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முதன்முறையாக ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பதிவிட்டதை அடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும், முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை குறித்தும் அவதூறாக பேசியிருந்தார். இது குறித்து ஈரோடு காவல்நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், இந்து சமய அறநிலையத்துறை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டது.

மேலும் இந்தப் புகார் தொடர்பாக ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜராகவில்லை.

இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக அவர் முதல்முறையாக ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எண் 1-ல் இன்று ஆஜரானார். அதன்பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹெச்.ராஜா வரும் 21 ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்