ஆபரேஷனுக்கு முன் அபாய எச்சரிக்கை.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்.. இரண்டே நாட்களில் 2 ஆயிரம் ரவுடிகள்..முழு விபரம்!!

 


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திண்டுக்கல், நெல்லை, மதுரை போன்ற மாவட்டங்களில் பழிக்கு பழிவாங்குதல், கும்பல் மோதல் பல்வேறு ரவுடிசம்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் ரவுடிகளின் அராஜகத்தை ஒழிக்கவும், குற்றங்களைத் தடுக்கும் விதமாக ரவுடிகளிடம் நள்ளிரவில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரடிகளின் அராஜகத்தை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் நேற்று ஒரே இரவில் ரகசியமாக அதிரடி நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் போட்ட ஸ்கெட்ச்தான் STORMING ஆப்ரேஷன்.

இந்த ஆபரேஷனின் முக்கியத்துவமே.. ரவுடிகளின் வீட்டில் சோதனை நடத்துவதுதான். அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை லிஸ்ட் எடுத்து, அவர்களின் வீடுகளில் புகுந்து சோதனை நடத்த திட்டமிட்டனர்.

அந்த வகையில் நேற்றைய முன்தினம் இரவு தமிழ்நாடு முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ஒரே இரவில் 560 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

ஆனால் நேற்று இரவு தமிழகம் முழுவதும் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க காவல்துறையினர் பலே திட்டம் தீட்டினர். பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைத்து ரவுடிகளையும் வேட்டையாடி கைது செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் நேரடியாக களம் இறங்கியுள்ளனர்.

இதன்படி கிராமப்புறங்கள் முதல் நகரப்பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் இடைவிடாமல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் எஸ்.பி ரவளி பிரியா உத்தரவின்பேரில் டி.எஸ்.பி அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் இரவு நேர ரவுடிகள் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கும்பகோணம் பழைய பாலக்கரையில் போலீசார் இரவு நேர ரவுடிகள் வேட்டைக்கு செல்வதற்கு அடையாளமாக ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் பைரோடெக் சிக்னல் கார்ட்டிரிட்ஜ் மூலம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதிலிருந்து புகையுடன் வெளியில் வந்த குண்டு வானத்தில் சிகப்பு நிற வண்ணத்தை ஒளிரச் செய்து மறைந்தது.

இதையடுத்து தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்களில் விடிய விடிய போலீசார் சோதனை நடத்தினர். இதுவரை கடந்த இரண்டு நாட்களில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

சிவப்பு நிற குண்டுகள் முழங்க சிக்னல் அளித்து விட்டு இது அபாயம் என்ற தோணியில் போலீசார் நடத்திய நடுநிசி வேட்டைக்கு மக்கள் வரவேற்பளித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)