பட்டா சிட்டா அடங்கல் வழங்க ரூ.2,500 லஞ்சம்-கையும் களவுமாக சிக்கிய தாலுகா அலுவலக எழுத்தர்

 


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பட்டா சிட்டா அடங்கல் வழங்க 2500 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக எழுத்தரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

காட்டுக்கூடலூர் சாலையை சேர்ந்த அருண் என்ற இளைஞருக்கு குப்பநத்தம் கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ள நிலையில், இது நொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

நிலம் தொடர்பான பட்ட சிட்டா அடங்கலை நாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கூறிய நிலையில், அதற்காக விருத்தாச்சலம் தாலுகா அலுவலக பதிவறை எழுத்தா சிவகுமாரை அனுகியுள்ளார்.

சிவகுமார் 2500 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் ஆயிரம் ரூபாயை கொடுத்த அருண்ட லஞ்சஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். இதனையடுத்து ரசாயனம் தடவிவ 1500 ரூபாயை லஞ்சமாக பெற்ற சிவகுமாரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.