எம்ஜிஆரும், வைகோவும் திமுகவின் துரோகிகள்… நினைத்தால் 24 மணிநேரத்தில் தூக்கிடுவோம் : துரைமுருகன் மிரட்டல் பேச்சு..!!


 திருப்பத்தூர் : எம்ஜிஆரும், வைகோவும் திமுகவின் துரோகிகள் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துருமுருகன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :- நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தால், எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடக் கூட அவர்களுக்கு தைரியம் வராது. திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.

சீட் கிடைக்காத ஆத்திரத்தில் எங்களை அடித்தால்கூட நாங்கள் வாங்கிக்கொள்வோம். ஏனென்றால் உங்களுக்கு அந்த உரிமை உள்ளது. ஆனால், கட்சிக்கு துரோகம் செய்பவன் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும், நான் நினைத்தால் 24 மணிநேரத்தில் தூக்கிடுவேன். எத்தனை காலத்திற்கு துரோகிகளை பார்ப்பது. அண்ணா காலத்தில் சம்பத், அதன்பிறகு எம்ஜிஆர், அதுக்கு பிறகு வைகோவை பார்த்துள்ளோம். இனிமேல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். நமக்கு தெரியாத தேர்தல் வித்தைகளில்லை, எனத் தெரிவித்தார்.


திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ள நிலையில், வைகோவை துரோகி என துரைமுருகன் பேசியிருப்பது கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)