தமிழகத்தில் நவ.1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் செப். 1 முதல் 9,10,11,12 -ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றும் அதிக அளவில் பரவவில்லை. எனவே, 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கலாமா என இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைகளுக்குப் பிறகு நவம்பர்1ம் தேதியிலிருந்து தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செப்ம்பர் 1- ம் தேதியிலிருந்து 9 முதல் 12- ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.