நாளை மறுநாள் வேட்பு மனுத்தாக்கல்... அக்.12 வாக்கு எண்ணிக்கை...! முழு விபரம் இதோ!
உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணைக்கு இணங்க 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 6.10.2021 மற்றும் 9.10.21 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் அறிவித்தவை இதோ:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.
5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர் வாக்கு செலுத்த ஏற்பாடு.
வேட்புமனு தாக்கல்15.9.21
வேட்புமனு நிறைவு 22.9.21
வேட்பு மனு பரிசீலனை 23.9.21
வேட்புமனு வாபஸ் 25.9.21
12.10.2021 வாக்கு எண்ணிக்கை
16.10.2021 வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும்
9 மாவட்ட உள்ளாட்சியில் தேர்தல்
- மனு தாக்கல் தொடக்கம் - செப் 15
- வேட்புமனு தாக்கல் நிறைவு - செப் 22
- வேட்புமனு ஆய்வு - செப். 23
- திரும்ப பெறுதல் - செப். 25
- முதல் கட்ட தேர்தல் - அக் 6
- 2 வது கட்ட தேர்தல் - அக். 9
- வாக்கு எண்ணிக்கை - அக் 12
-----------
நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் விபரம்.
- மாவட்ட பஞ்சாயத்து தலைவர் - 1
- மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் -12
- ஊராட்சி ஒன்றியம் -9
- ஊராட்சி ஒன்றிய வார்டுகள்-122
- கிராம ஊராட்சி - 204
- கிராம ஊராட்சி வார்டு -1731
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலை அடிப்படையாக கொண்டு 37, 77,524 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 38,81,361 பெண் வாக்காளர்களும் உள்ளனர். முதல்கட்ட வாக்கு பதிவு 7921 வாக்கு பதிவு மையங்களிலும், இரண்டாம் கட்ட வாக்கு பதிவு 6552 வாக்கு சாவடிகளிலும் நடைபெறும். 76,59,720 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். 835 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இருந்து 5 கிலோமீட்டர் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும், தேர்தல் அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர கோரிக்கை
7.9.2021அன்று கொரோனோ முன்னெச்சரிக்கை குறித்து சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். 9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்க சுகாதார துறைக்கு கோரிக்கை.
மாற்றுத்திறனாளி கள் வாக்களிக்க சாய்வு தளம், சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில் 13 அத்தியாவசிய பொருட்கள் வைத்திருக்க வேண்டும். அதிர் கையுறைகள், வெப்பமாணி, கிருமிநாசினி போன்றவை இருக்க வேண்டும். 171 தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் ஈடுபட உள்ளனர். 3,777 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தமாக 1லட்சத்து 10 ஆயிரம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 41,500 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் மாவட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.கொரோனா காலம் என்பதால் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ,பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பார். தேர்தல் பார்வையாளர்கள் மாவட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. கொரோனா காலம் என்பதால் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ,பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பார்.