பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ்... வெளியான ஆடியோவில் திடீர் திருப்பம்..!
தலைமைக்காவலர் சிவக்குமார் தனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைப்பதாக நாகரஞ்சினி மாவட்ட காவல் துறையிடம் 6 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தனது குழந்தை காணவில்லை என்று புகார் அளிக்க வந்த பெண்ணை போலீஸ் ஒருவர் உல்லாசத்திற்கு அழைத்ததாக ஆடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் நாகரஞ்சினி நீதிமன்ற ஊழியரான இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தையை காணவில்லை என்றும் குழந்தையை மீட்டு தருமாறு சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குழந்தை அவரது கணவரிடம் இருப்பது தெரியவந்தது. விவகாரத்து வழக்கு நிலையில் இருக்கும் போது குழந்தையை அழைத்து சென்றதாக கணவர் மீதும் நாகரஞ்சினி மீண்டும் ஒரு புகாரை கொடுத்துள்ளார். இந்நிலையில், அடிக்கடி காவல் நிலையம் வந்து செல்லும் போது காவல் நிலையத்தின் தலைமைக்காவலர் சிவக்குமார் என்பவருக்கும் நாகரஞ்சினிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமைக்காவலர் சிவக்குமார் தனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைப்பதாக நாகரஞ்சினி மாவட்ட காவல் துறையிடம் 6 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த நாகரஞ்சினிக்கும் தலைமைக்காவலர் சிவக்குமாருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவலர் சிவக்குமார் நாகரஞ்சினிக்கு 3.5 லட்சம் வரை கடனாக கொடுத்துள்ளார். கொடுத்த கடனை நாகரஞ்சினி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், காவலர் சிவக்குமார் உல்லாசத்திற்கு அழைத்ததாக நாகரஞ்சினி ஆடியோவை வெளியிட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், போனில் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ தன்னுடையது அல்ல என்று காவலர் அப்போதே மறுத்து குரல் பரிசோதனைக்கு தயார் என்றும் தனது உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
6 மாதங்களுக்கு முன்பே விசாரணை முடித்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், தான் காவலர் உல்லாசத்திற்கு அழைப்பதாக ஆடியோ தற்போது மீண்டும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகவும் காவல்துறை தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆடியோ மட்டும் வெளியிட்டு வரும் நாகரஞ்சினி சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் கொடுக்காமல் போலியாக சித்தரித்து ஆடியோ வெளியிட்டு வருவதாகவும், ஏற்கனவே அவர் மீது அரசு வேலை வாங்கி தருவதான புகார் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.