பாலியல் வீடியோ… கேடி ராகவன் மீது காங்., எம்பி ஜோதிமணி புகார்..!! உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வலியுறுத்தல்!!

 


முன்னாள் பாஜக பிரமுகர் கேடி ராகவன் இடம்பெற்றது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், காவல்நிலையத்தில் காங்கிரஸ் எம்பி புகார் மனு அளித்துள்ளார்.

பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கேடி ராகவன், வீடியோ காலில் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். மேலும், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், பாஜக பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனிக் குழுவும் நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் கே.டி. ராகவன் மீது கரூர் எம்.பி ஜோதிமணி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். தற்போது பாஜக பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. எனவே கே.டி. ராகவன் உள்ளிட்ட பாஜக, அதிமுகவை சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். நீதியின் முன் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் தலைநிமிர்ந்து நடக்க முடியும். இவர்களை இந்த அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் என்ற உத்தரவாதத்தை, நம்பிகையை தமிழக அரசு அளிக்கும் என்று நம்புகிறோம், என தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்