கள்ளக்குறிச்சி: போக்சோ வழக்கில் லஞ்சம் வாங்கிய பெண் காவலர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் போக்சோ வழக்கில் லஞ்சம் வாங்கியதாக இரண்டு பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
70 வயது முதியவர் ஒருவர் பேத்தியை வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. முதியவருக்கு உதவியாக இருந்த ராஜாமணி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, காவல்துறையினருக்கு 23 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனடிப்படையில், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் கீதாராணி, முதல்நிலை காவலர் கோகிலா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.