மேல்விசாரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

 


மேல்விஷாரம்  ஏ.எம்.ஐ முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சி.அப்துல் ஹக்கீம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் எஸ்.இசட்.அப்ரார், அஹ்மத் சாஹிப் அகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

 


இந்த தடுப்பூசி முகாமினை எம்.எம்.இ.எஸ்.பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர கே.அனீஸ் அஹ்மத் சாஹிப், மேல்விஷாரம் நகராட்சி  ஆணையாளர் திருமால் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்

 மேலும் இந்த நிகழ்ச்சியில் தி.நேஷனல் அசோஷியேஷன் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த முகாமில்  392 பயனாளிகள் பயனடைந்தனர்.