திமிரி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

 


கொரோனா நோய்தொற்று இந்தியா முழுவதும் இரண்டாம் அலையைக் கடந்து மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்

 அந்த  வகையில்  ஆற்காடு அடுத்த  திமிரி பேரூராட்சியில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் பாபு தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது 

இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் இளவேந்தன், பேரூராட்சி  துப்புரவு மேற்பார்வையாளர்! முத்துசாமி, மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கிராம நிர்வாக உதவியாளர்கள் இணைந்து திமிரி பேருந்து நிலையத்திலிருந்து பஜார் முழுவதும்

 விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை கையிலேந்தி வீதி வீதியாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர் மேலும்  கைகளை சுத்தமாக கழுவவும், கட்டாயம் முக கவசம் அணிவும், சமூக 

இடைவெளிகளை கடைப்பிடிக்கவும் வணிகர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

  அரசு வழிகாட்டும், நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் வலியுறுத்தினார்  மீறும் பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகத்தால்  அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.இவர்களின் பணியை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)