பாலியல் தொல்லை அளித்த விவகாரம் : தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!!
சென்னை : பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ வழக்கில் கைதாகியுள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
போக்சோ வழக்கில் கைதாகியுள்ள தடகள பயிற்சியாளர்கள் நாகராஜன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை போக்சோ நீதிமன்றத்தில் நாகராஜன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாகராஜன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே, சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், தடகள பயிற்சி அகாடமியை பிராட்வேயில் நடத்தி வந்தார்.
தடகள பயிற்சி அகாடமிக்கு பயிற்சிக்கு வந்த வீராங்கனையருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக சேனை பூக்கடை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த மே 28ஆம் தேதி நாகராஜன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.