போன் சிக்னல்..! எடப்பாடியார் புகைப்படம்..! கொடநாடு கொலை வழக்கின் பகீர் நகர்வு..!

 


நீதிமன்றத்தில் சயான் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில் கொலை செய்வது தங்கள் நோக்கமில்லை என்றும் கொடநாடு பங்களாவில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் சில அமைச்சர்கள் தொடர்புடைய ஆவணங்கள், மன்னிப்பு கடிதங்கள்,. சிடிக்கள் போன்றவற்றை கொள்ளை அடிப்பது மட்டுமே தங்களின் டார்கெட் என்றும் ஆனால் காவலாளி ஓம்பகதூர் எதிர்பார்த்ததை விட அதிக எதிர்ப்பு காட்டியதால் வேறு வழியில்லாமல் வாளையாறு மனோஜ் கொலை செய்துவிட்டதாக கூறி அதிர வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

கொடநாடு கொலை வழக்கை தற்போது விசாரித்து வரும் உதகை போலீசாரின் ஸ்பெசல் டீம் கண்டறிந்துள்ள முக்கிய தடயங்கள் எடப்பாடி பழனிசாமி மட்டும் அல்லாமல் அதிமுகவில் மேலும் சிலருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.


நீதிமன்றத்தில் சயான் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில் கொலை செய்வது தங்கள் நோக்கமில்லை என்றும் கொடநாடு பங்களாவில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் சில அமைச்சர்கள் தொடர்புடைய ஆவணங்கள், மன்னிப்பு கடிதங்கள்,. சிடிக்கள் போன்றவற்றை கொள்ளை அடிப்பது மட்டுமே தங்களின் டார்கெட் என்றும் ஆனால் காவலாளி ஓம்பகதூர் எதிர்பார்த்ததை விட அதிக எதிர்ப்பு காட்டியதால் வேறு வழியில்லாமல் வாளையாறு மனோஜ் கொலை செய்துவிட்டதாக கூறி அதிர வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.


இதனிடையே இந்த கொலையை தொடர்ந்து நடைபெற்ற சில திட்டமிடாத சம்பவங்கள் தான் தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு வில்லங்கமாகிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். அதாவது கொள்ளை அடித்துவிட்டு கோவை சென்று சில ஆவணங்களை வழங்கிவிட்டு தொடர்ந்து சேலத்திற்கு செல்வது தான் இந்த சம்பவத்திற்கு தலைவராக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் திட்டமாக இருந்தது. ஆனால் கொலை நடைபெற்றதை தொடர்ந்து பதற்றமாகி எஸ்பி வேலுமணியிடம் கனகராஜ் செல்போனில் பேசியதாகவும் மேலும் அவர் மூலமாக கான்பிரன்ஸ் காலில் எடப்பாடி கனகராஜிடம் பேசியதாகவும் இந்த அனைத்து செல்போன் பேச்சுகளும் நடைபெற்றதற்கான சிக்னல் கொடநாட்டில் உள்ள செல்போன் டவரில் பதிவாகியுள்ளதாகவும் அதனை போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அதாவது கொள்ளை நடைபெற்ற போது கனகராஜ் பயன்படுத்திய செல்போனில் யார் யார் பேசினார்கள் என்கிற விவரத்தை போலீசார் டிரேஸ் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். இதே போல் கனகராஜ் இந்த கொள்ளை திட்டத்திற்கு ஆள் சேர்க்க சயானை சந்தித்த போது எடப்படி பழனிசாமியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் காட்டியுள்ளார். அந்த புகைப்படத்தை வாட்ஸ்ஆப் மூலம் சயானுக்கு கனகராஜ் அனுப்பியதாகவும் சொல்கிறார்கள். தற்போது அந்த புகைப்படமும் போலீசார் வசம் சென்றுள்ளதாக கூறுகிறார்கள்.


இதே போல் கொடநாடு எஸ்டேட் பங்களா எப்படி இருக்கும் என்று கனகராஜூக்கு அவ்வளவாக தெரியாது என்கிறார்கள். போர்டிகோவில் இருந்து ஹால் வரை மட்டுமே கனகராஜை கொடநாடு பங்களாவிற்குள் அனுமதித்துள்ளார்கள். எனவே ஜெயலலிதா அறை, சசிகலா அறை போன்றவை எப்படி இருக்கும் என்பதை நீலகிரியை சேர்ந்த மர வியாபாரியான சஜீவன் மூலம் கொள்ளை கும்பல் தெரிந்து கொண்டுள்ளது. அதாவது கொடநாடு பங்களாவின் புளூ பிரின்டை சஜீவன் கொள்ளை கும்பலிடம் கொடுத்துள்ளார். மர வேலைகளை செய்ய கொடநாடு பங்களாவிற்கு சென்ற போது தான் பார்த்த அறைகள், வழிகளை வைத்து அந்த புளூ பிரின்டை சஜீவன் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

அத்துடன் கொள்ளை நடைபெற்ற போது சஜீவன் துபாயில் இருந்துள்ளார். ஆனால் அன்றைய தினம் சஜீவன் சகோதரர் சுனில் நள்ளிரவில் துபாயில் உள்ள தனது அண்ணனிடம் செல்போனில் பேசியுள்ளார். அதே போன்று சுனிலிடம் டிரைவர் கனகராஜூம் பேசியுள்ளார். இந்த விவரங்களையும் போலீசார் பக்காவாக சேகரித்துவிட்டனர். மேலும் கொள்ளை கும்பல் சென்ற போது வாகன சோதனையில் போலீஸ் டீம் ஒன்றிடம் சிக்கியுள்ளனர். அப்போது துபாயில் இருந்து நீலகிரி மாவட்ட உயர் காவல் அதிகாரி ஒருவரை சஜீவன் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதன் பிறகே கொள்ளை கும்பலை பேட்ரோல் போலீசார் விடுவித்துள்ளனர். இந்த விவரங்கள் தொடர்பாகவும் தற்போது போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதனிடையே கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட கனகராஜ் விபத்தில் மரணம், சயான் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தது போன்ற விஷயங்களும் கோ இன்சிடன்ட் ஆக இருக்காது என்கிற முடிவுக்கு வந்துள்ள போலீசார் அந்த வழக்கையும் கொடநாடு, கொலை கொள்ளை வழக்கோடு இணைக்கும் நடவடிக்கையிலும்இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)