புயலில் சிக்கிய தமிழக பாஜக.. கரைசேருவாரா அண்ணாமலை: தீவிர யோசனையில் டெல்லி!?

 இரு தினங்களாக தமிழக பாஜகவில் பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. கேடி ராகவனில் தொடங்கிய புயல் இப்போது அண்ணாமலையில் நிலை கொண்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் கட்சி உறுப்பினருமான கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் சர்ச்சை வீடியோவை வெளியிட்டது ஒரு  யூட்யூப் சேனல். அதற்கு பின் தொடங்கியது பாஜகவுக்கு தலைவலி. ராகவனின் வீடியோவை வெளியிட்ட போது இது பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதல் பெற்றே வெளியிடப்பட்டது என்றும், பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றால் வெளியிடுங்கள் என அண்ணாமலை தலையசைத்ததாகவும் அந்த யூ ட்யூபர் தெரிவித்தார். 

உடனடியாக அண்ணாமலை இப்படி செய்திருக்கக் கூடாது என்று பாஜக தொண்டர்களும், அண்ணாமலைக்குள் இன்னும் போலீஸ் இருப்பது பாராட்டுக்குரியது என மற்ற கட்சியினரும் பாராட்டுகளை பறக்க விட்டனர்.  அப்போது வெளியானது அண்ணாமலையின் அறிக்கை. அந்த அறிக்கையில் யூட்யூபர் கூறியது போல அவ்வாறு கூறவில்லை என மறுத்திருந்தார் அவர். மேலும் கே.டி.ராகவன் தன் மீதான புகாரைத் தவறென்று நிரூபிப்பார் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட யூட்யூபரின் செயல்களுக்குக் கட்சி நிர்வாகம் பொறுப்பாகாது எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் காக்கிச் சிங்கம் என்றெல்லாம் பதிவிடப்பட்ட பாராட்டு வார்த்தைகள் வந்த பாதையில் திரும்பின. அப்போது வரை புயல் அடித்தது கேடி ராகவன் மேல்தான். 


Annamalai: புயலில் சிக்கிய தமிழக பாஜக.. கரைசேருவாரா அண்ணாமலை: தீவிர யோசனையில் டெல்லி!?

அதற்கு பின்னரே புயல் திசைமாறியது. கேடி ராகவன் வீடியோவை வெளியிட்ட யூ டியூபர், அண்ணாமலையின் சம்மதத்துடனே இந்த வீடியோவை வெளியிட்டதாக நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் கூறினார். இதுதொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் அண்ணாமலையுடன் தான் பேசுவது போன்று ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். 

அதில் டெல்லியில் ஒரு வாய்ப்பை உங்களுக்கு உருவாக்கித் தருகிறேன்.  நீங்கள் இதை அங்கே காட்ட வேண்டும். முக்கியமானவர்களிடம் இதைக் காட்ட வேண்டும். இதுபோன்ற மிக மோசமான நபகர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை புரிய வைப்போம். எனக்கு தமிழ்நாட்டில் யாரும் ஆர்டர் போட முடியாது. அதை அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டார். நான் தலைவராக இருக்கும்போது ஏதும் நடக்காது.  நான் தலைவனான பிறகு கட்சித் தலைவர் அறையின் கதவை கண்ணாடி கதவாக மாற்றிவிட்டேன்.  இந்த அறைக்குள் என்னென்னவோ நடக்கிறது. இப்போது உள்ளே நுழையும் யாரும் தலைவரைப் பார்க்கலாம். நான் என் அறைக்கு எந்த பெண்ணையும் தனியாக நுழைய அனுமதிப்பதில்லை. குஷ்பு உள்பட யாராக இருந்தாலும் சரி. ஒரு சிறிய புரட்சியை செய்துள்ளேன் என பல விஷயங்களை பேசுகிறார். அண்ணாமலையின் ஆடியோ விவகாரத்துக்கு பிறகு ராகவன் விஷயம் காணாமல் போக, அண்ணாமலை ட்ரெண்டானார். 


Annamalai: புயலில் சிக்கிய தமிழக பாஜக.. கரைசேருவாரா அண்ணாமலை: தீவிர யோசனையில் டெல்லி!?

அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜகவில் கருத்து தெரிவித்து வந்தாலும், அவருக்கு எதிராக அவரது கட்சியினர் பலரே கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அண்ணாமலை, பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமென்றும், டெல்லி பாஜக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கருத்து பதிவிட்டுவருகின்றனர். அண்ணாமலை விஷயத்தில் டெல்லி பாஜகவும் கவனம் செலுத்துவதாகவே தகவல்கள் கசிந்துள்ளன. அதற்கு பல காரணங்களை குறிப்பிடுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அண்ணாமலை பதவியில் கால்பதித்த நாள் முதலே கட்சிக்குள் கடுமையான உத்தரவுகளை பதிவிட்டு வருவதாகவும், கெடுபிடி கடுமையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல பிரமுகர்கள் சத்தமில்லாமல் கட்சியை விட்டு விலகி வந்துள்ளனராம். இதையும் டெல்லி பாஜக கவனித்தே வந்துள்ளது. இந்தவேளையில் ராகவன் விவகாரம் தலையெடுக்க அண்ணாமலை பேசுபொருளாகியுள்ளார். தமிழகத்தில் தாமரை மலர வேண்டுமென டெல்லி பாஜக பல திட்டங்களையும், கார் நகர்த்தலையும் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. நீண்ட கால முயற்சிக்கு பிறகு தற்போதுதான் மெல்ல தமிழகத்தில் நிற்கத் தொடங்குகிறது பாஜக. இந்த நேரத்தில் சேர்த்து வைத்த மொத்தத்தையும் ஒரே நேரத்தில் தொலைப்பது போல அண்ணாமலை விவகாரம் தலை தூக்குவதாக கோபத்தில் இருக்கிறதாம் டெல்லி பாஜக. இந்த நேரத்தில் அண்ணாமலையை ஒதுக்கி வைப்பதே நல்லது என அவர்கள் யோசிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. 



Annamalai: புயலில் சிக்கிய தமிழக பாஜக.. கரைசேருவாரா அண்ணாமலை: தீவிர யோசனையில் டெல்லி!?

தமிழக பாஜகவில் நிலைகொண்டுள்ள புயல் அண்ணாமலைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா? டெல்லி பாஜகவுன் அடுத்த நடவடிக்கை அண்ணாமலைக்கு பச்சை சிக்னலா? அல்லது சிவப்பு சிக்னலா? அரசியல் நோக்கர்களின் விமர்சனம் நடக்குமா? தவிடுபொடியாகுமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. அதேவேளையில் அண்ணாமலை விவகாரத்தில் டெல்லி பாஜக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது தமிழக பாஜகவுக்கு பின்னடை நிச்சயம் என்றும், அதன் சதவீதம் வேண்டுமானாலும் மாறலாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)